கே.ஜி.எப் ஹீரோவுக்கு வில்லனாக ஷாம்

கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான யஷ் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யவம்சி படத்தில் ஷாம் வில்லனாக நடித்துள்ளார்.
யஷ், ஷாம்
யஷ், ஷாம்
Published on

கே.ஜி.எப் படம் மூலம் தென் இந்திய ரசிகர்களை கவர்ந்த யஷ் நடித்த சூர்யவம்சி படம் தமிழில் வெளியாக உள்ளது. மகேஷ்ராவ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ராதிகா யஷ்சை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார். 

ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமை திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்சிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான். அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com