நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு

நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம்சாட்டியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
Published on

இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். ஸ்ருதி நிபுணன் படத்தில் அர்ஜுன் மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்ருதி ஹரிஹரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

எனக்கு பாலியல் தொல்லைகள் நடக்கும் போதெல்லாம் உடல் ரீதியாக அங்கிருந்து வெளியேறிவிட்டேன், ஆனால் மனரீதியாக அது பயத்தை உண்டாக்கி என்னை பாதித்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து வெளிவர நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போது இரு மொழிகளில் உருவாகி வந்த ஒரு படத்தில் நான் நடித்துவந்தேன். அதில் நடிகர் அர்ஜுன் சர்ஜா தான் நாயகன். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிப்பது குறித்து ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களுக்கு எனக்கு எதுவும் தோன்றவில்லை, அந்த படத்தில் நான் அவரது மனைவியாக நடித்தேன். 

ஒரு நாள் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதில் ஒரு நீளமான வசனத்திற்கு பிறகு நானும், அவரும் கட்டிப் பிடித்து நடிக்க வேண்டி இருந்தது. அந்த காட்சியை நாங்கள் ஒத்திகை பார்த்த போது, அர்ஜுன் திடீரென என்னை கட்டிப்பிடித்தார். என்னிடம் எதுவும் சொல்லாமல், என் அனுமதியை பெறாமல் என்னை கட்டி அணைத்து எனது பின் பகுதியில் மேலும், கீழும் அவர் கையை படறவிட்டார். என்னை மேலும் இறுக்கி அணைத்து, வேண்டுமென்றால் இந்த காட்சியை வைத்துக் கொள்ளலாமா என்று இயக்குநரிடம் கேட்டார்.

சினிமாவில் காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக இப்படி நடந்து கொள்வது தவறு. அவர் சினிமாவுக்காக அப்படி நடந்து கொண்டிருந்தாலும் அது தவறு தான். அவர் செய்தது எனக்கு அது பிடிக்கவில்லை, என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. 

இவ்வாறு கூறியுள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com