அருள்நிதி ஜோடியான ஷ்ரத்தா ஸ்ரீநாத்

`புகழேந்தி எனும் நான்' படத்தை தொடர்ந்து பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Arulnidhi
அருள்நிதி ஜோடியான ஷ்ரத்தா ஸ்ரீநாத்
Published on

அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொர்ந்து அருள்நிதி, தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் `புகழேந்தி எனும் நான்' படத்தில் நடித்து வருகிறார். சமகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். 

இந்த நிலையில் பரத் நீலகண்டன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமானார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், அருள்நிதி ஜோடியாக இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளர். விக்ரம் வேதா, ரிச்சி படங்களுக்கு பிறகு கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பிசியாக இருந்த ஷ்ரத்தா, அருள்நிதி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார். இதுதவிர மாதவன் ஜோடியாக மாறா என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருள்நிதியின் 12-வது படமாக உருவாகும் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #Arulnidhi

X

Maalai Malar
www.maalaimalar.com