ஷ்ரத்தா ஸ்ரீநாத் கருத்தால் கிளம்பிய புதிய சர்ச்சை

தமிழில் `இவன் தந்திரன்', `விக்ரம் வேதா' படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத், இந்தியில் ஒழுக்கம் இருக்கிறது, திறமையிருக்கிறது என்று கூறி தமிழ் சினிமாவை குறைத்து பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. #ShraddhaSrinath
ஷ்ரத்தா ஸ்ரீநாத் கருத்தால் கிளம்பிய புதிய சர்ச்சை
Published on

தமிழில் கவுதம் கார்த்திக் நடித்த `இவன் தந்திரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். `விக்ரம் வேதா' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தார்.

கர்நாடகாவை சேர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தில் யூ-டர்ன் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் இந்தி பட உலகில் நுழைந்துள்ளார். மிலின் டாக்கீஸ் படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் நடிக்கிறார்.

தமிழில் நடித்து விட்டு இந்தியில் நடிப்பது பற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் கேட்டபோது, “நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பாலிவுட்டில் (இந்தி) இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.

எனது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தார். இதனால் வட மாநிலத்தில் இருந்ததால் இந்தி நன்றாக பேசுவேன். இதனால் எனக்கு மொழி பிரச்சினை இல்லை என்றார்.

தமிழில் நடித்துவிட்டு இந்திக்கு சென்றதும் தமிழ் சினிமாவை ஷ்ரத்தா ஸ்ரீநாத் குறைத்து பேசி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #ShraddhaSrinath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com