டீசர் மூலம் சர்ப்ரைஸ் கொடுக்கும் ஷாமின் ‘காவியன்’ படக்குழு

பார்த்தசாரதி இயக்கத்தில் ஷாம் நடிப்பில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘காவியன்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
டீசர் மூலம் சர்ப்ரைஸ் கொடுக்கும் ஷாமின் ‘காவியன்’ படக்குழு
Published on

ஷாம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காவியன்’. 

நாயகியாக ஸ்ரீதேவி குமார், ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா நடித்துள்ளனர். ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பார்த்தசாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை சபரீஷ் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்றழைக்கப்படும் லாஸ் வேகாஸில் படமாக்கப்படவுள்ளது. லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. 

2 எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் `கா-வியன்' என்றும் தெலுங்கில் `வாடு ஒஸ்தாடு' என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com