சந்தானம் ஜோடியான மலையாள நடிகை

ராம்பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஷிர்தா சிவதாஸ் நடித்து வருகிறார். #DhillukuDhuddu2 #Santhanam
சந்தானம் ஜோடியான மலையாள நடிகை
Published on

சந்தானம் - அஞ்சால் சிங் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தில்லுக்கு துட்டு’. காமெடி கலந்த திகில் படமான இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். 

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பற்றி இயக்குநர் ராம்பாலா பேசியதாவது,

“தில்லுக்கு துட்டு-2, முதல் பாகத்தை விட மிகவும் ஜாலியான படமாக இருக்கும். இது, நகைச்சுவை கலந்த திகில் படம். என்றாலும் படத்தில் நிறைய ‘சீரியஸ்’ ஆன திகில் காட்சிகள் உள்ளன. இந்த படம், கதாநாயகியின் கதாபாத்திரம் மீது பயணிக்கும் கதையம்சம் கொண்டது.

மலையாள பட உலகில் பிரபலமாக இருக்கும் ஷிர்தா சிவதாஸ் படத்தின் கதாநாயகி. கதைக்கு மலையாளம் பேசும் மலையாள பெண் தேவை என்பதால்தான் இவரை கதாநாயகியாக தேர்வு செய்தோம். மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் பிபின் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் சிறப்பாக வந்து இருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்து, அதிக கவனம் செலுத்தி, இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். முதல் பாகம் வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் வெளியீடாக படம் திரைக்கு வரும்.” என்று கூறினார். #DhillukuDhuddu2 #Santhanam #ShirthaSivadas

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com