அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு

அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு
Published on

இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவரும் தவறுதலாக அந்த குழியில் விழுந்து, சிறிது நேரத்தில் மூழ்கி விடுகின்றனர். காரும் மெல்ல மெல்ல குழியில் இறங்கிக் கொண்டே செல்ல ஷாருக் கானின் தோழி அலற ஆரம்பிக்கிறாள்.

அவளது அலறலைக் கேட்டு அங்கிருந்த குகை ஒன்றிலிருந்து ராட்சத உடும்பு ஒன்று புதைக்குழி நோக்கி வருகிறது. இந்நிலையில், செய்வதறியாது தவித்த ஷாருக்கான் அந்த குழியில் உள்ள மண், சகதியை தூக்கி அந்த உடும்பு மீது வீசுகிறார்.

நொடிக்கு நொடி பதற்றம் கூடிக் கொண்டே செல்ல, அந்த ராட்சத உடும்புவின் உடலில் இருந்து ஒரு மனிதன் வெளியேறுகிறான். பின்னர் தான் இது ஷாருக்கானை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட சேட்டை என்பது தெரிய வருகிறது. அந்த குழியும் போலியாக செய்யப்பட்டது தான்.

பின்னர் குழியில் விழுந்த அனைவரும் வெளியே தூக்கப்படுகின்றனர். ஷாருக்கான் அதிலிருந்து வெளியேறி உடன் இந்த திட்டத்திற்கு காரணமானரை சென்று அடிக்க செல்கிறார். பின்னர் கடுமையாக அவரை திட்டிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறார். ஆனால் அந்த நபர் ஷாருக்கை விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அவர் பின்னாலேயே சென்று ஷாருக்கானை சமாதானம் செய்வது போல அந்த வீடியோ முடிகிறது.

வீடியோ:

X

Maalai Malar
www.maalaimalar.com