விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #VikramVedha
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை
Published on

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம் ‘விக்ரம் வேதா’. இந்த படம் இந்தியில் ‘ரீமேக்’ ஆக இருக்கிறது.

இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் இதில் நடிக்க விரும்புகிறார். என்றாலும், மாதவன் தமிழில் நடித்த பாத்திரத்தில் இந்தியிலும் நடிக்க வேண்டும். விஜய் சேதுபதி பாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தை இந்தியிலும், தமிழ் படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இருவரும் இயக்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஷாருக்கான் இந்தி பதிப்பை நீரஜ்பாண்டே இயக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது.

ஷாருக்கானின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தி ‘விக்ரம் வேதா’ படத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஷாருக்கானுக்காக, அவர் விரும்பும் மாற்றம் நடக்கும். நிச்சயம் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பார் என்று இந்தி பட உலகில் பேசப்படுகிறது. #VikramVedha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com