சாஹோ படத்தில் இருந்து வெளியேறிய பிரபலங்கள்

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தில் இசையமைப்பதற்கு ஒப்பந்தமான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சாஹோ படத்தில் இருந்து வெளியேறிய பிரபலங்கள்
Published on

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த மூவேந்தர்களான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகியுள்ளனர். படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு மாற்றாக வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருகிறது. யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை துபாயில் நடத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com