காமெடி படத்தில் இணையும் ஜீவா - ஷாலினி பாண்டே

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே இருவரும் ஹெய்ஸ்ட் காமெடி படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காமெடி படத்தில் இணையும் ஜீவா - ஷாலினி பாண்டே
Published on

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் ஜீவாவின் 29-வது படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜீவா ஜோடியாக `அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குநர் டான் சாண்டி.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் (திருட்டு சம்பந்தப்பட்ட) காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவாவின் 29-வது படமாக இந்த படம் உருவாகிறது. இதற்கு `விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.” என்றார்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் யோகி பாபு இணைந்து காமெடியில் கலக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையிலேயே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜீவா தற்போது `கலகலப்பு-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர காலீஸ் இயக்கத்தில் `கீ' படத்திலும் நடித்து வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com