டுவிட்டரில் ஷாருக் கானை தொடர்பவர்கள் எண்ணிக்கை 2.8 கோடியாக உயர்ந்தது

பாலிவுட் நடிகர் ஷாருக் கானை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 28 மில்லியனாக (இரண்டு கோடியே என்பது லட்சமாக) இன்று உயர்ந்தது.
டுவிட்டரில் ஷாருக் கானை தொடர்பவர்கள் எண்ணிக்கை 2.8 கோடியாக உயர்ந்தது
Published on
நடிகர் ஷாருக் கான் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை அவர் பதிவிட்டு வருகிறார். சில முக்கிய புகைப்படங்களையும் அவர் வெளியிடுகிறார். அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை இன்று 28 மில்லியனாக (இரண்டு கோடியே என்பது லட்சமாக) உயர்ந்துள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை 29 மில்லியன் பேரும், சல்மான் கானை 25.6 மில்லியன் பேரும், அமீர் கானை 21.9 மில்லியன் பேரும், அக்‌ஷய் குமாரை 20.2 மில்லியன் பேரும், நடிகைகளில் தீபிகா படுகோனேவை 20 மில்லியன் பேரும், பிரியங்கா சோப்ராவை 18.9 மில்லியன் பேர்ரும் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Maalai Malar
www.maalaimalar.com