நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன்.... முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷுடன் கூட்டணி

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ்
Published on

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே. ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம், நடிகராக களமிறங்கியுள்ளார் செல்வராகவன். இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திராத்தில் நடிக்கிறார். 

சுதந்திர தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ‘சாணிக் காயிதம்’ படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே  ‘ராக்கி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com