சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா

‘தர்மதுரை’ படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா
Published on

‘மா மனிதன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதியும் தற்போது அடுத்தடுத்த படங்கள் என பிசியாக இருப்பதால், அந்த படத்தை தொடங்குவதற்கு முன்னதாக சீனு ராமசாமி அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா தற்போது `செம போத ஆகாதே', `ருக்குமணி வண்டி வருது', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில், அதர்வா கல்லூரி மாணவராக நடிக்கிறார். இது கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதை. நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு சீனுராமசாமி மீண்டும் விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com