விஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி

நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ பட்டம் வழங்கியது போல், தற்போது உதயநிதிக்கு புதிய பட்டம் ஒன்றை வழங்கி இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
விஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி
Published on

பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் ‘தர்மதுரை’ படத்தின் போது, கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்று பட்டம் வழங்கினார். இந்த பட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு, அனைத்து படங்களிலும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி என்று அனைவரும் அழைத்து வருகிறார்கள்.

தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ என்று பட்டம் வழங்கி இருக்கிறார். உதயநிதி  ஸ்டாலினை வைத்து ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் சீனுராமசாமி. இதில் தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் முழுவதையும் பார்த்த சீனுராமசாமி, ‘கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத்தோன்றியது’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு உதயநிதி, ‘உங்கள் அன்புக்கு நன்றி சார்! அந்த அளவிற்கு எனக்கு தகுதி இப்பொழுது இருப்பதாக நான் நம்பவில்லை! படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி!’ என்று கூறியிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com