சீமத்தண்ணி

விஜய்மோகன் இயக்கத்தில் விதார்த் - விஜய்வசந்த் இணைந்து நடிக்கும் ‘சீமத்தண்ணி’ படத்தின் முன்னோட்டம்.
சீமத்தண்ணி
Published on

கிரேட் எம்பரர் புரொடக்‌ ‌ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் தயாரிக்கும் படம் ‘சீமத்தண்ணி’.

பல முன்னணி இயக்குனர்களிடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் துணை, இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

விதார்த், விஜய் வசந்த் கதாநாயகர்களாக இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சாந்தினி, சுபிக்‌ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் ‘மலர்விழி’ என்னும் முக்கிய வேடத்தில் சாந்தினி நடிக்கிறார்.

மசானி ஒளிப்பதிவு செய்கிறார். இசை - சதீஷ் திருமூர்த்தி, எடிட்டிங் - சி.எஸ்.பிரேம்குமார், கலை - விஜயராஜன், நடனம் - தினேஷ், ஜாய்மதி, ஸ்டண்ட் - நாதன்லீ, பாடல்கள் - நந்தலாலா, சீர்காழிசிற்பி, மோகன்ராஜ், தயாரிப்பு - பி.பிரேம்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய்மோகன். படம் பற்றி கூறிய அவர்...

“ரே‌ஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அனாதை நண்பர்களுக்கும், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் ‘தங்கமாரி’ எனும் கதாபாத்திரத்திற்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாக உருவாகிறது” என்றார். இதன் படப்பிடிப்பை இயக்குனர் ஏ.சற்குணம் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com