சீமராஜா

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் முன்னோட்டம். #Seemaraja #Sivakarthikeyan #Samantha
சீமராஜா
Published on

24 ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘சீமராஜா’. 

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் முதல்முறையாக அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். நெப்போலியன், சிம்ரன், லால், சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், இசை - டி.இமான், எடிட்டிங் - விவேக் ஹர்ஷன், பாடல்கள் - யுகபாரதி, கலை - முத்துராஜ், சண்டைப்பயிற்சி - அனல் அரசு, ஆடை வடிவமைப்பு - அனு பார்த்தசாரதி, எகா லஹானி, நிர்வாக தயாரிப்பு - மாலா மன்யன், தயாரிப்பு - ஆர்.டி.ராஜா, எழுத்து, இயக்கம் - பொன்ராம்.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது,

“ படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினி முருகன் படத்தின்போதே இந்த யோசனை பற்றி பொன்ராமும், நானும் பேசினோம். இந்த படத்தில் வரும் அதிரடி காட்சிகளை குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். 

காமெடியும் நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் ” என்றார்.

பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி - டி.இமான் - பாலசுப்ரமணியம் - விவேக் ஹர்ஷன் என அறுவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com