சாயிஷாவின் ஆசையை நிறைவேற்றுவாரா பிரபுதேவா

அறிமுகமான ஒரு சில படங்களின் மூலமே முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கும் சாயிஷா சய்கல் தான் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவே ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். #SayyeshaaSeigal
சாயிஷாவின் ஆசையை நிறைவேற்றுவாரா பிரபுதேவா
Published on

சாயிஷா சய்கல் அறிமுகமான வேகத்திலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். தற்போது சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

வசனத்தை மனப்பாடம் பண்ணித்தான் பேசுவேன் என்று அடம் பிடிக்கிறீர்களாமே?

மொழி தெரியாதவர்கள் தான் பிராம்ப்டிங் வைத்து டயலாக் பேசுவார்கள். எனக்கு பிராம்ப்டிங் பண்ண தெரியாது. கேமரா ஆனில் இருக்கும்போது ஒருவர் டயலாக் சொல்லி சொல்லி அதை அப்படியே சொல்வது என்பது ரசிகர்களை ஏமாற்றும் வேலை. டயலாக்கை மனப்பாடம் செய்து பேசும்போது தான் அந்த காட்சிக்கு தகுந்த ரியாக்‌‌ஷன் வரும். எனவே பிராம்ப்டிங் பண்ணுவதில்லை.

யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை..?

பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சிறு வயதில் இருந்தே நடனம் கற்று வருகிறேன். எனக்கு 10க்கும் மேற்பட்ட வகை நடனம் தெரியும். அதனால் முழு நீள நடனப் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதே?

தினமும் காலையில் டீ குடிக்கும்போது பேப்பர் படிக்கிறது என் வழக்கம். சென்னையில 11 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் பத்திப் படிச்சதும் மனசு தாங்கலை. தொடர்ந்து குழந்தைகள் மேல நிகழ்த்தப்படும் குற்றங்கள் வருத்தத்தைத் தருது. சட்டங்கள் கடுமையாக்கப்படணும். அது மட்டும் போதாது. மக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வோடு இருக்கணும்.

எந்த வி‌ஷயத்தையும் உடனே கத்துக்கணும்னு நினைக்கிற என் ஆர்வம்தான். ஒரு வி‌ஷயத்துல ஈடுபட்டா, அதுல நூறு சதவீதம் வெற்றிபெறணும். புதுசா சாதிக்கணும். சின்ன வயசுலயே எல்லாவிதமான டான்ஸையும் கத்துக்கிட்டேன். இப்பவும் நேரம் கிடைச்சா டான்ஸ் ரிகர்சலுக்கு போவேன். லத்தீன் அமெரிக்கன் ஸ்டைலில் சம்பா, சல்சா டான்ஸ் தெரியும். கதக் தெரியும். சினிமாவுக்கு தேவையான டான்ஸ் தெரியும். லத்தீன் அமெரிக்காவுக்கு போய், அவங்களோட பாடிலாங்குவேஜையும், எப்படி டான்ஸ் பண்றாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப ஜிம்னாஸ்டிக்ஸ் கத்துக் கிட்டிருக்கேன். #SayyeshaaSeigal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com