ஏழைகளுக்கும், ஈழதமிழர்களுக்கும் உதவுவதே லட்சியம் - சத்யராஜ் மகள்

ஏழைகளுக்கும், ஈழதமிழர்களுக்கும் உதவுவதே எனது லட்சியம் என்று ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வரும் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கூறியிருக்கிறார்.
ஏழைகளுக்கும், ஈழதமிழர்களுக்கும் உதவுவதே லட்சியம் - சத்யராஜ் மகள்
Published on

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச வைட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார்.

இது பற்றி கூறிய திவ்யா....

“சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டேன்.

இனி, ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ஊட்டச்சத்து ஆலோசனை மையம் சென்னையில் தொடங்க உள்ளேன். ஊட்டச்சத்து மாத்திரைகள் தொடர்ச்சியாக இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் என்கிற நிலைமை மாற இது முதல் அடித்தளமாக இருக்கும்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com