நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரித்துள்ள படம் `சத்யா'.
சிபிராஜ், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி, ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா, ஆத்மா பேட்ரிக், சித்தார்த் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இசை - சிமோன் கே.கிங், படத்தொகுப்பு - கவுதம் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவு - அருண்மணி பழனி, தயாரிப்பு - நாதாம்பாள் பிலிம் பேக்டரி, கதை - அத்வி சேஷ், இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் சிபிராஜ் கூறும்போது,
“எனது 4 வயது மகன், நான் நடித்த எல்லா படங்களையும் பார்க்கிறான். இதனால் நான் கதாநாயகிகளுடன் நெருக்கமான காதல் காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடிப்பதை தவிர்க்கிறேன்” என்றார்.
`சத்யா' வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி ரிலீசாகிறது.