சத்ரு

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் கதையாக உருவாகி வரும் ‘சத்ரு’ படத்தின் முன்னோட்டம்.
சத்ரு
Published on

இதில் கதாநாயகனாக கதிர், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - அம்ரிஷ், பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ, எடிட்டிங் - பிரசன்னா, ஜி.கே, கலை - ராஜா மோகன், ஸ்டண்ட் - விக்கி, தயாரிப்பு - ரகு குமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான்.

இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...

“இது ஒரு ஆக்‌‌ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள். ஒவ்வொரு ரசிகனும் சீட் நுனியில் அமர்ந்து தான் பார்க்கத் தோணும்.

கதிர் மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இந்த படம் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தரும். தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தருகிற கதை தான் ‘சத்ரு’. கதிர் ஜோடியாக சிருஷ்டி டாங்கே பொருந்தி போகிறார். படத்திற்கு தேவையான செலவை தயாரிப்பாளர்கள் பாராட்டும் வகையில் செய்துள்ளனர். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது” என்றார்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com