சத்ரு

நவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்ரு' படத்தின் முன்னோட்டம். #Sathru #Kathir #SrustiDange
சத்ரு
Published on

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சத்ரு'. 

கதிர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். ராட்டினம் படத்தில் நாயகனாக நடித்த லகுபரன் இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜூன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - அம்ரிஷ், பாடல்கள் - கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ, படத்தொகுப்பு - பிரசன்னா.ஜி.கே, கலை - ராஜா மோகன், சண்டைப்பயிற்சி - விக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நவீன் நஞ்சுண்டான்.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

இது ஒரு ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதையில், ஆக்‌ஷன் கலந்த ரொமான்ஸ் கதையில் படம் உருவாகி இருக்கிறது. குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெறியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு என்றார்.

படம் மார்ச் 8-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Sathru #Kathir #SrustiDange #Lagbaran

சத்ரு டிரைலர்:

X

Maalai Malar
www.maalaimalar.com