அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்

கொடிவீரன் படத்திற்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசுரவதம்’ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #ASURAVADHAM
அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
Published on

‘கொடிவீரன்’ படத்திற்கு பிறகு நடிகராக சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அசுரவதம்’. இப்படத்தை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ புகழ் எம்.மருதுபாண்டியன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இதனை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தற்போது, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தின் டிரையிலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com