சிவகார்த்திகேயனுக்கு போட்டியான சந்தானம்

காமெடியாக அறிமுகமாகி நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் சந்தானம், சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக மாறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு போட்டியான சந்தானம்
Published on

இதுதவிர சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சந்தானம் ஜோடியாக `தில்லுக்கு துட்டு' படத்தில் அவருடன் இணைந்து நடித்த வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் இப்படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், 'சர்வர் சுந்தரம்' படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளான செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாளில் தான் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்', ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ் பாபு கூட்டணியில் `ஸ்பைடர்', கவுதம் கார்த்திக்கின் `ஹரஹர மகாதேவகி', ஜெய்யின் `பலூன்' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com