கான்ட்ராக்டரை அடித்து நிஜ வாழ்க்கையில் ஆக்‌ஷன் ஹீரோவான சந்தானம்: ஆர்யா

`சக்க போடு போடு ராஜா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா, நிஜ வாழ்க்கையிலும் சந்தானம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ தான் என்று சமீபத்தில் நடந்த அடிதடி பிரச்சனையை குறிப்பிட்டு சந்தானத்தை கலாய்த்தார்.
கான்ட்ராக்டரை அடித்து நிஜ வாழ்க்கையில் ஆக்‌ஷன் ஹீரோவான சந்தானம்: ஆர்யா
Published on

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ராஜேஷ் மற்றும் `சக்க போடு போடு ராஜா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். பொதுவாகவே ஆர்யா இருக்கும் இடம் பெ்போதும் கலகலப்பாக இருக்கும். என்ன பேச வேண்டுமோ அதனை வெளிப்படைத் தன்மையுடன் பேசும் ஆர்யா நிகழ்ச்சியில் கூறும் போது,

சந்தானம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக முடியுமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் இருந்தது. அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சந்தானம் தான் நிஜ வாழ்க்கயைிலேயே ஒரு ஆக்‌ஷன் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார். சமீபத்தில் கான்ட்ராக்டருடன் நடந்த பிரச்சனை நாம் அறிந்ததே. அவரது கையில் கூட ஒரு கட்டு இருக்கிறது. அடிகொடுத்த கைப்புள்ளைக்கே(சந்தானம்) கையில கட்டுனா, அடி வாங்குனவன் எப்படி இருக்கானோ தெரியலயே. எனவே சந்தானம் தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com