வைரலாகும் சந்தானத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on: 

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டிக்கிலோனா. இதில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தனர். அதன்படி வெளியான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com