இணையதளங்களில் வைரலான சஞ்சய் தத்தின் பயோபிக் டீசர்

இந்தி பட உலகில் முன்னணி நடிகராகவும் நிஜ வில்லனாகவும் இருக்கும் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. #SanjayDutt #Sanju
இணையதளங்களில் வைரலான சஞ்சய் தத்தின் பயோபிக் டீசர்
Published on

இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சய் தத். இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘சன்ஜு’ என்ற பெயரில் புதிய படம் உருவாகியுள்ளது. இதில் நடிகர் சஞ்சய் தத்தாக நடித்திருக்கிறார் ரன்பீர் கபூர். 

மேலும் சோனம் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா ஷர்மா, கரிஷ்மா டானா, தியா மிர்ஸா என்ற ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ‘த்ரீ இடியட்ஸ்’, ’பிகே’ போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை இந்தாண்டு (2018) ஜூன் மாதம் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com