இயக்குநராகும் சஞ்சய் பாரதி

பிரபல நடிகர் சந்தான பாரதியின் மகனும், நடிகருமான சஞ்சய் பாரதி தற்போது இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். #SanjayBharathi
இயக்குநராகும் சஞ்சய் பாரதி
Published on

இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி நாங்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். புத்தகம், ஜன்னல் ஓரம், ஜீவா, மாஸ், தேவி, வனமகன், கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

இயக்குநர் விஜய்யிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சஞ்சய் பாரதி, தற்போது இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார்.

ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படத்தை சஞ்சய் இயக்குகிறார். காதல் கலந்த அதிரடி படமாக இது உருவாகவிருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. #SanjayBharathi #SanthanaBharathi

X

Maalai Malar
www.maalaimalar.com