விஜய் ஆண்டனி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சங்கீதா

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thamizharasan #VijayAntony
விஜய் ஆண்டனி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சங்கீதா
Published on

`கொலைகாரன்', `அக்னிச் சிறகுகள்' படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது `தமிழரசன்', `காக்கி' படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சங்கீதா ஒப்பந்தமாகி இருக்கிறார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சங்கீதா தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். 

இதுகுறித்து சங்கீதா கூறும்போது,

எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக அமையாததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்படும், மருத்துவமனை ஒன்றை நடத்தும் டாக்டர் வேடத்தில் நடிக்கிறேன். இதில் எனது கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood #Sangeetha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com