சங்கத்தமிழன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தமிழன்
சங்கத்தமிழன்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி முன்பே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறினார்கள். தற்போது நவம்பர் 15ம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com