சண்டக்கோழி 2

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் முன்னோட்டம். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh
சண்டக்கோழி 2
Published on

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் மற்றும் பென் ஸ்டூடியோஸ் சார்பில் அக்‌ஷய், தவால், ஜெயந்திலால் கடா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சண்டக்கோழி 2'.

விஷால் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா, கஞ்சா கறுப்பு, ராம்தாஸ், கபாலி விஷ்வந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு - கே.ஏ.சக்திவேல், கலை இயக்குனர் - வி.செல்வகுமார், சண்டைப்பயிற்சி - அனல் அரசு நடனம் - ராஜு சுந்தரம், தயாரிப்பு - விஷால், ஜெயந்திலால் கடா, தயாரிப்பு நிறுவனம் - விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டூடியோஸ், திரைக்கதை - லிங்குசாமி, பிருந்தா சாரதி, வசனம் - எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்து, இயக்கம் - லிங்குசாமி.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும் போது,

25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா கொண்டு வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வதாக சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை. 

தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். 

படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal

சண்டக்கோழி 2 படத்தின் டீசர்:

X

Maalai Malar
www.maalaimalar.com