பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

பார்த்திபன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘உள்ளே வெளியே-2’ படக்குழுவில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்
Published on

‘உள்ளே வெளியே’  படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், ‘உள்ளே வெளியே’  2-ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணையதளம் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதுதவிர மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி நானும் ஒரு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று பார்த்திபன் சமீபத்தில் தெரிவித்திருக்கிறாராம். 

பார்த்திபன் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். ‘உள்ளே வெளியே-2’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியானவுடன், படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com