ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். #Samantha #Uturn
ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த சமந்தா
Published on

கன்னடத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யூடர்ன்’. தற்போது இது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. பவன்குமார் இயக்கும் இந்த படத்தில் சமந்தா, ஆதி, ரவீந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிப்பதற்காக வந்த சமந்தாவை காண ஏராளமான ரசிகர்கள் கூடிநின்றனர். அப்போது காரில் வந்து இறங்கிய சமந்தாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் அவர் தனது நீண்ட கூந்தலை பாதியாக குறைத்து புதிய தோற்றத்தில் காணப்பட்டார். நீளமாக இருந்த தலைமுடியை இப்படி பாதியாக நறுக்கி விட்டாரே என்று ரசிகர்களில் பெரும்பாலானோர் கவலையுடன் பேசிக்கொண்டனர்.

என்றாலும், சிலர் சமந்தா எப்படி வந்தாலும் நன்றாகத்தான் இருப்பார். இந்த தோற்றத்திலும் அழகாகத்தான் இருக்கிறார். என்று சொல்லிக்கொண்டார்கள்.

ரசிகர்களைப் பார்த்து சமந்தா கை அசைத்ததும், அவருடைய ‘ஹேர்ஸ்டைல்’ குறையை மறந்து விட்டு கூடி நின்றவர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com