கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா

திருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷை புகழ்ந்து பேசியிருக்கிறார். #Samantha #KeerthySuresh
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
Published on

சமந்தா திருமணத்துக்கு பின் நடிக்கும் படங்கள் எல்லாம் வரிசையாக வெற்றி பெறுகின்றன. தனி கதாநாயகியாக நடித்து இந்த வாரம் வெளியாகி இருக்கும் யு டர்ன் படமும் பெரிய வெற்றி பெற்றதோடு அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இது சமந்தாவுக்கு உற்சாகம் அளித்து இருக்கிறது. 

இதுபற்றி கூறும்போது ‘‘படம் பார்க்கிற எல்லோருமே நல்ல கதையை சமந்தா தேர்வு செய்திருக்காங்க என்று பாராட்டுகிறார்கள். முதன்முறையாக நாயகி சம்பந்தப்பட்ட கதை என்பதால் உள்ளுக்குள் பதற்றம் இருந்தது. என் மீது எத்தனை பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை, நானே பார்த்து தெரிந்துகொண்டேன்’ என்றார். 

நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் வேடத்தில் நடித்து இருக்கலாம் என்று தோன்றியதா? என கேட்டதற்கு ‘கீர்த்தி சுரேசுக்கு ‘நடிகையர் திலகம்’ படம் மூலமாக ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அவர், தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைத்தார். அசர வைத்தார். உரிய வாய்ப்புகள் வந்தால், எல்லோரும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். நானும் அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com