வித்தியாசமான வேடங்களில் சமந்தா

திருமணத்திற்குப் பிறகும் பிசியாக நடித்து வரும் சமந்தா, வித்தியாசமான வேடங்களை ஏற்று இந்த வருடம் ரசிகர்களை கவர இருக்கிறார்.
வித்தியாசமான வேடங்களில் சமந்தா
Published on

திருமணத்திற்குப் பிறகும் சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் ‘மெர்சல்’ திரைப்படம் மட்டும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த வருடம் இவருடைய நடிப்பில் 5, 6 படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களில் சமந்தா வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் ‘மகாநதி’ படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். ராம்சரணுடன் நடிக்கும் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ஏழை பெண்ணாக வருகிறார். 

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் புதிய படத்தில் சிலம்பாட்ட வீராங்கனையாக கலக்குகிறார். விஷாலுடன் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தில் மனநல மருத்துவராக அசத்துகிறார். இப்படி வித்தாசமான வேடங்களை ஏற்று ரசிகர்களை இந்த வருடம் மகிழ்விக்க இருக்கிறார் சமந்தா.

X

Maalai Malar
www.maalaimalar.com