மதுரவாணியாக சமூக வலைதளங்களை கலக்கும் சமந்தா

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. #NadigaiyarThilagam #Samantha
மதுரவாணியாக சமூக வலைதளங்களை கலக்கும் சமந்தா
Published on

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். 

இதில் சமந்தா பத்திரிகை நிருபராக நடிக்கிறார். இதில் சமந்தா மதுரவாணி என்ற கதபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது தோற்றம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NadigaiyarThilagam #Mahanati #Samantha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com