ராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி

நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் மூலம் விக்ரம் வேதா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan
ராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி
Published on

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் இயக்கும் இந்த படத்தில் அவரே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ராக்கெட்ரி - தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பை சாம்.சி.எஸ்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி போன்ற ஒரு படத்திற்கு இசையமைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படம் எனக்கு நெருக்கமானது. இந்த படத்திற்கு இசையமைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிரம்மாண்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த மாதவனுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரியும் ஆவலோடு இருக்கிறேன் இவ்வாறு கூறியிருக்கிறார்.

நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. #RocketryTheNambiEffect #Madhavan #NambiNarayanan #SamCS

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com