கேத்ரினா கைப்பை பார்ம் ஹவுஸுக்கு அழைத்து சென்ற சல்மான் கான்

தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நடிகை கேத்ரினா கைப்பை தன்னுடைய பார்ம் ஹவுஸுக்கு அழைத்து சென்றிருக்கிறார் சல்மான் கான்.
கேத்ரினா கைப்பை பார்ம் ஹவுஸுக்கு அழைத்து சென்ற சல்மான் கான்
Published on

இந்தி பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தனது 52 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு நடைபெற்ற விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பில் சல்மான் கான் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதுபோல் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்பும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் இருவரும் உடை மாற்றிக் கொண்டு, சல்மான் கானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஒன்றாக சென்றுள்ளனர்.

மும்பை பன்வேல் பண்ணை வீட்டிற்கு கேத்ரினா கைப்பை சல்மான் கான் அழைத்து சென்றிருக்கிறார். அங்கு கேத்ரினா கைப் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

மேலும் தனது பிறந்த நாளை முன்னிட்டு பீயிங் ஹியூமன் (Being Human) என்ற துணி நிறுவனத்தை நடத்தி வரும் சல்மான், இன்று வாங்கும் துணிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடியும் அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com