வில்லியாக களமிறங்கிய சாக்‌ஷி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது உருவாகி இருக்கும் பேய் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார்.
சாக்‌ஷி அகர்வால்
சாக்‌ஷி அகர்வால்
Published on

ராய் லட்சுமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சிண்ட்ரெல்லா'. திகில் ஹாரர் பேய்ப் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும்போது, "இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும்.

அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக 'சிண்ட்ரெல்லா' இருக்கும்.

சாக்‌ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்’ என்றார்.

இதன் டீசரை இந்திய அளவில் புகழ்பெற்ற வரும் பரபரப்புக்குப் பெயர் பெற்றவருமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் வெளியிட்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com