மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துவரும் சாக்‌ஷி அகர்வால், முதன்முறையாக மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் சாக்‌ஷி அகர்வால்
Published on

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த இவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘ஓராயிரம் கினாக்கள்’  என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனரான ப்ரமோத் மோகன் இயக்கும் இந்தப் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். இப்படத்தில் இவரே சொந்தக் குரலில் பேசுவதற்காக மலையாளம் கற்று வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

X

Maalai Malar
www.maalaimalar.com