`சக்க போடு போடு ராஜா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் - வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
`சக்க போடு போடு ராஜா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சேதுராமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சந்தானம் - வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

நடிகர் சிம்பு இசையில் இப்படத்தில் இருந்து இரு பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com