சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா

சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா தமிழ் சினிமாவில் களமிறங்கிய இருக்கிறார். அதன் முன்னோட்டமாக அவர் நடித்துள்ள குறும்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா
Published on

இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தமிழ் பெண்ணாக நடித்து புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி. தற்போது மிகவும் பிஸியான நடிகை யாக உள்ளார். மலையாள ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாய் பல்லவிக்கு போட்டியாக அவரது தங்கை பூஜா கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதற்கு முன்னோட்டமாக பூஜா நாயகியாக நடித்த ‘காரா’ என்ற குறும் படம் யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது.

கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் பார்த்தனர். பின்னர் பூஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருகிறேன். எனது அக்காள் சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதால் எனக்கும் பட வாய்ப்புகள் வருகிறது. படிப்பு முடிந்த உடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com