நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 27-வது திரைப்படத்திற்கு பிரபல இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பார்க்கிங்' திரைப்படத்தை இயக்கிப் புகழ்பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிவகார்த்திகேயனின் 27 வது படத்தை இயக்குகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
பவள மல்லி ,காட்சி சேரா.ஆசா கூட போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற சாய் அபயங்கர், சிவகார்த்திகேயன் நடிக்கும் 27 வது திரைப்படத்திற்கு இசையக்கிறார்.சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் திரைப்படம் இதுவாகும்.இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காயடு லோஹர் நடிக்க இருக்கிறார். அதிகாரப்பூர்வ பூஜை இன்று நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .