சாமி ஸ்கொயர் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
சாமி ஸ்கொயர் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
Published on

ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிபு தமீன்ஸ் கூறியிருப்பதாவது,

`செப்டம்பர் மாதத்தை குறித்துள்ளோம். மத்திய மற்றும் மாநில தணிக்கை குழு அனுமதி கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com