ஒரு பாடலுக்கு ரூ.2 கோடியை செலவு செய்யும் பிரபுதேவா படக்குழு

எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா ஆடும் பாடல் ஒன்றுக்கு ரூ.2 கோடி செலவில் செட் அமைக்கப்படுகிறது.
ஒரு பாடலுக்கு ரூ.2 கோடியை செலவு செய்யும் பிரபுதேவா படக்குழு
Published on

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.கல்யாண் இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ரூ.2 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையில் உருவான இதற்கான பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பு - விஜய் வேலுக்குட்டி, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் பங்கேற்புடன் இது பிரமாண்ட முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கே.ஜே.ஆர். ராஜேஷ் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com