இந்த வருஷம் தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள் - ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு

நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அப்படத்தின் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் பட போஸ்டர்
மூக்குத்தி அம்மன் பட போஸ்டர்
Published on: 

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். 

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே நிறைவடைந்தது. படத்தை மே 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

இந்நிலையில், இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 25-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com