வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா

எக்ஸ் வீடியோஸ் மூலம் பிரபலமான நடிகை ரியாமிகா, படப்பிடிப்பில் வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்திருக்கிறார். #Riyamika
வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா
Published on

சமீபத்தில் வெளியான எக்ஸ் வீடியோஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரியாமிகா. பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தார். 

படிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்துள்ள ரியாமிகாவுக்கு 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' என்கிற படம் தான் அறிமுகம் கொடுத்தாதது. ஆனால் தற்போது வெளியான எக்ஸ் வீடியோஸ் படம் ஓரளவு அடையாளத்தையும் கொடுத்துள்ளது. 

எக்ஸ் வீடியோஸ் படத்தின் இயக்குனர் இவரை ஒப்பந்தம் செய்தபோது முழுக்கதையையும் சொல்லாமல் இவர் நடிக்கும் காட்சிகளை மட்டும் சொல்லி சம்மதிக்க வைத்தாராம். அதுமட்டுமல்ல படத்தில் ஒப்பந்தமான பின்னரே படத்தின் டைட்டிலே என்னவென்று ரியாமிகாவுக்கு தெரியவைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் லைட்டாக ஜெர்க் ஆனாலும், அந்தப்படத்தில் முழு ஈடுபாட்டுடன் தனது நடிப்பை வழங்கியதாக கூறுகிறார் ரியாமிகா.

எக்ஸ் வீடியோஸ் படத்தை தொடர்ந்து 'அகோரி' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார் ரியாமிகா. ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் மொத்தமே ஐந்து கேரக்டர்கள் தான் என்பதும் அதில் ரியாமிகா ஒருவர்தான் பெண் என்பதும் ஆச்சர்யமான செய்தி.

"இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சுமார் ஒரு மாதம் நடந்தது. ஒவ்வொருவருக்கான காட்சியாக மாற்றி மாற்றி எடுத்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அங்கே வேடிக்கை பார்க்க வந்த பசங்களுக்கு கிளாசிக் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன். மீதி நேரங்களில் நான் உட்பட மற்ற நடிகர்களும் ஒரு டெக்னீஷியனாகவும் இறங்கி வேலை பார்த்தோம்" என்கிறார் ரியாமிகா 

மேலும் 'மாயவன் படத்தை தொடர்ந்து சி.வி.குமார் இயக்கும் அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com