ரிச்சி

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தூத்துக்குடி ரவுடியாக நிவின்பாலி கலக்கும் ‘ரிச்சி’ படத்தின் முன்னோட்டம்.
ரிச்சி
Published on

இதில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் நட்ராஜ் சுப்பிரமணியன், ‌ஷரதா, ராஜ்பரத், லட்சுமி பிரியா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - பாண்டி குமார், இசை - அஜனீஷ் லோக்நாத், தயாரிப்பு - ஆனந்த் குமார், வினோத் ஷொனூர். இயக்கம் - கவுதம் ராமச்சந்திரன்.

இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்.

படம் குறித்து இயக்குனர் கவுதம், ராமச்சந்திரன் கூறும் போது...

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். படகுகளை சரி செய்யும் மெக்கானிக் வேடத்தில் நட்டி நடித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். நிவின்பாலி தமிழில் முதல்முறையாக இந்த படத்தில் தான் அவருடைய சொந்த குரலில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறார்.

இந்த படம் நிவின் பாலிக்கு தமிழ்ப்பட உலகில் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். ‘ரிச்சி’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. விரைவில் இந்த படம் தணிக்கைக்கு அனுப்பப்பட இருக்கிறது.

டிசம்பர் 1-ந்தேதி ‘ரிச்சி’ படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com