கவுதம் கார்த்திக் ஜோடியான ரெஜினா

திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரெஜினா கசாண்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கவுதம் கார்த்திக் ஜோடியான ரெஜினா
Published on

`நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு கவுதம் கார்த்திக்கை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் அப்பா கார்த்திக்கும், மகன் கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர். கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க ரெஜினா கசாண்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை எம்.கே.ஆர் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மசாலா மிக்ஸ் இணைந்து தயாரிக்கிறது. பெயரிடப்படாத இந்த படத்தை கவுதம் கார்த்திக்கின் ‘இவன் தந்திரன்’ படத்தை தயாரித்த கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com