கிக்கி சேலஞ்சில் கலக்கிய நடிகை ரெஜினா - வைரலாகும் வீடியோ

தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வரும் நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் கிக்கி சேலஞ்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #KiKiChallange #ReginaCassandra
கிக்கி சேலஞ்சில் கலக்கிய நடிகை ரெஜினா - வைரலாகும் வீடியோ
Published on

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமைதியான பெண்ணாக நடித்தவர் ரெஜினா. அதனைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு சமீபத்தில் கவுதம் கார்த்திக்கு அவர் ஜோடியாக நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படம் ரிலீசானது. இப்படத்தில் பிகினி உடையில் அவர் கலக்கியிருந்தார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரெஜினா.

அதில் ஓடும் காரில் இருந்து இறங்கி ஒரு பாப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சிறிது நேரம் ஓடும் காருக்கு இணையாக சாலையில் நடனம் ஆடும் அவர், பின்னர் அதே வேகத்தில் ஓடும் காரில் ஏறிக் கொள்கிறார். இந்த வீடியோ படப்பிடிப்பின் இடைவேளையில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் பாவாடை தாவணி கட்டி, கிராமத்துப் பெண் போன்ற தோற்றத்தில் ரெஜினா தோற்றமளிக்கிறார்.

கூடவே இந்தப் பதிவில் அவர், ‘கிக்கி சாலஞ்ச் முடித்து விட்டேன். உங்களுடைய டியூனுக்கு தென்னிந்தியப் பெண்களாலும் டான்ஸ் ஆட முடியும்‘ என தெரிவித்துள்ளார். பிரபல ஆலிவுட் பாப் பாடகர் டிரேக்சின் ஸ்கார்பியன் எனும் ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ‘இன் மை பீலிங்ஸ்’.

கடந்த மாதம் இந்த ஆல்பம் ரிலீசாகி இணையத்தில் வைரலானது. இந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதுபோல டான்ஸ் ஆடும் சவால் ‘இன் மை பீலிங்ஸ்’ சவால் அல்லது கிக்கி சவால் என்ற பெயரில் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. #KiKiChallange #ReginaCassandra

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com