பெண் ஓரின சேர்க்கையாளராக ரெஜினா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரெஜினா, தற்போது இந்தி படத்தில் பெண் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார். #Regina #SonamKapoor
பெண் ஓரின சேர்க்கையாளராக ரெஜினா
Published on

தமிழில் முன்னணி நடிகை ரெஜினா. கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நீச்சல் உடையில் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் ஏறிவிட்டது. சமீபத்தில் வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கு சிலுக்குவார் பட்டி சிங்கம் படமும் ரெஜினாவின் மார்க்கெட்டை தக்கவைத்திருக்கிறது.

அவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. புதிய படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தியில் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில், அனில் கபூர், ஜூஹி சாவ்லா, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா நடித்து உள்ளார்.

இந்த படத்தின் கதைப்படி சோனம் கபூர் ஒரு லெஸ்பியன். அவருக்கு திருமணம் நடத்தி வைக்க பெற்றோர்கள் முடிவு செய்யும் போது, நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை. இந்த படத்தில் சோனம் கபூரின் பெண் காதலியாக, மற்றொரு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை யார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி அந்த சஸ்பென்சை உடைத்துள்ளது. அதில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த காட்சியை நிறுத்தி பார்க்கும் போது, சோனம் கபூரின் காதலியாக நடித்திருப்பது ரெஜினா என்பது தெரியவந்துள்ளது. கலாச்சார மாற்றத்தின் சாட்சியாக உருவாகியுள்ள இப்படத்தில் லெஸ்பியனாக ரெஜினா நடித்துள்ள செய்தி பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. #Regina #SonamKapoor

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com